Items related to வியந்தான ...

வியந்தான் வியர்த்தான் கம்பன் (Tamil Edition) - Softcover

கவிஞர் இர அரங்கநாதன்

 
9798895192580: வியந்தான் வியர்த்தான் கம்பன் (Tamil Edition)

Synopsis

இந்த வரிகள் என் இதயத்தின் உணர்வுகள் ஏற்படுத்திய இன்ப வலிகளின் வடுக்கள். அந்த வடுக்களினுள் நீறுபூத்த நெருப்பாய் கிடந்ததை தன் பேரழகு விசிறியால் வீசி ஊழித் தியாக்கி உலவிட்டவள் ஒரு பேரழகு தேவதை. அவளை மட்டும் நான் கண்ணுறாதிருந்தால் இத்தனை வீச்சுக்களோடு. என் கனவுக்கன்னி கவிதைச் சலங்கையிட்டு விண்ணுலகம் வரை விரவி நடனமாடியிருக்க மாட்டாள். அவளை சில முறை மட்டுமே நான் கண்டேனாயினும், அழியா ஓவியமாய் அலங்கார நர்த்தகியாய் என் இதய மாளிகையில் எக்கணமும் நடமிட்டுக் கொண்டே இருக்கிறாள். அந்நடனம் என் எப்பிறப்பிலும் தொடரும் தொடர வைப்பேன். அவளை நான் உயிர்ப்போடு இதயத்தில் இருந்து கரங்களில் இறக்கி எழுதுகோலின் வழியே உலவ விட்ட உன்னதம் தான் இந்த புத்தகத்தின் கவிதை வரிகள். அவள் உயிரியல் ரீதியாக யாருக்கும் சொந்தமாயிருக்கலாம். ஆனால் கனவு நாயகியாக என் கற்பனைக்கே சொந்தம். அவளுக்கு நான் நன்றிகள் நவில மாட்டேன். ஏனெனில் என் கனவுகளோடு கலந்து எனக்குள்ளான இனியவளுக்கு நான் எப்படி நன்றி சொல்ல..... இருப்பினும் இல்லாத நன்றிகளை சொல்லாமல் சொல்கிறேன்.

"synopsis" may belong to another edition of this title.